Thursday, August 4, 2011

திருப்பூவணம் -- 2 -- கோயிலின் உள்ளே தூண்கள்

திருப்பூவணக் கோயிலில் என் கருத்தைக் கவர்ந்தவை பல. அவற்றுள் ஒரு வகை ... கோயிலில் உள்ள தூண்கள். கண்ணுக்குத் தட்டுப்பட்டவரை ... ஒவ்வொரு தூணிலும், தூணின் ஒவ்வொரு பக்கத்திலும், ஒவ்வொரு வகைச் சிற்ப வடிவம். மிகத் துல்லியமான செதுக்கு. இன்றைக்கும் எண்ணெய்க் கறையோ பிற கறைகளோ படாத நிலையில் நல்ல முறையில் பாதுகாக்கப்பட்டு வருவது தெரிகிறது. இது நல்லது!

ஆனால் ... அந்த ஊர்க்காரர்களுக்கே அந்தத் தூண்களில் உள்ள வடிவம் ஒவ்வொன்றையும் பற்றித் தெரியுமா என்று எனக்குத் தெரியாது.

சரியான ஒளி இல்லாததாலும், கால் வலி குறுக்கிட்டதாலும் சில தூண்களை மட்டுமே படம் எடுக்க முடிந்தது.  

இயன்றவர்கள் போய் எல்லாத் தூண்களையும் ஆற அமரப் பார்த்துப் படம் பிடித்துக் கதையோடு ஆவணப்படுத்தவேண்டும். பண்டைக் காலச் சிற்பிகளுக்கு நம் நன்றி சொல்லவேண்டும்.








பிற பின்னர்.

No comments:

Post a Comment