Monday, August 15, 2011

திருப்பூவணம் -- 3 -- கடவுளரும் பிறரும் ...

எடுத்த எல்லாப் படங்களையும் இணையத்துக்கு ஏற்றபடித் தயார்செய்ய முடியவில்லை. அதனால் இதுவே திருப்பூவணம் பற்றிய கடைசிப் பதிவு.

1. அநுமன் ... பக்தர்கள் தங்களின் வேண்டுதலையோ "ஸ்ரீராமஜயம்" என்ற சொல்லையோ எழுதித் தொடுத்த காகித மாலையுடன் ... .  ('சிவன் கோயிலில் அநுமன், கிருஷ்ணன் எல்லாரெயும் பாக்கறோம்; அந்தக் காலத்துலெ  சைவமும் வைணமும் எணைஞ்சுதான் இருந்திருக்கணும்' என்று அன்புமீனாவும் கமலியும் சொல்லிக்கொண்டார்கள்.)




2. அநுமனுக்கு அடுத்த பக்கம் பொன்னனையாள் சித்தனாய் வந்த மன்மதன் போன்ற சிவனுடைய கன்னத்தைக் கிள்ளிய சிலை.






3. தேவார மூவரும் மணிவாசகரும் ...





4. அறுபத்து மூவருள் சிலர் ... . எல்லாரையும் படம் பிடித்தாலும் இருட்டிலிருந்து வெளிக்கொணர நிறைய நேரம் தேவைப்படும். அதனால் ஒரு சிலர் மட்டுமே இங்கே ... .





5. அம்மை செந்தர்ய நாயகி இருப்பிடத்துக்குச் செல்லும் வழி ... . மிகவும் அழகான துப்புரவான பாதை! பரந்த திறந்த வெளி. நூற்றுக்கணக்கான பேரை உட்காரவைத்துச் சொற்பொழிவு செய்ய வசதியான இடம்போல! சுற்றுச் சுவர் முழுவதும் ஒழுங்காக, அழகாக எழுதிவைக்கப்பட்ட நல்ல நல்ல சொற்கள். எடுத்துக்காட்டாக ... "அன்பு வாழ வைக்கும். ஆசை தாழ வைக்கும்." முனைவர்கள் காளைராசனும் கண்ணனும் செய்த "கைங்கர்ய"மோ?! :-)






இயன்றால் ... கட்டாயம் திருப்பூவணம் கோயிலுக்குப் போய்ப் பாருங்கள். மிக மிக அழகான துப்புரவான கலையழகு நிறைந்த கோயில்!


4 comments:

  1. அழகான படங்கள். சமீபத்தில் தான் நாங்கள் திருப்பூவணநாதரை தரிசித்து வந்தோம். மன நிறைவையும் அமைதியையும் அள்ளித் தரும் அழகிய நாதர் அவர்....நன்றி அம்மா.

    ReplyDelete
  2. அது எப்படி தெய்வீகக்களையை மட்டும் ஃபோட்டோ எடுத்தீர்கள்! வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. இன்னும் போகலை; பார்க்கலாம், நேரம் வாய்க்கிறதானு! படங்கள் அருமையாக வந்திருக்கின்றன. வாழ்த்துகள் அம்மா.

    ReplyDelete