Monday, August 22, 2011

கலிப்படம் -- அணில்கொறித்த ஆப்பில் பழம் ...


எங்கே நம் மின்தமிழ்க் கவிஞர்கள் மோகனும் ஹரியும்?


விரும்பினால் ... பாடுங்கப்பா ... "தோட்டத்தில் என் தேட்டத்தை!" என்ற பொருளை வைத்து.

என் புலம்பல் ...

பாட்டுவீணை இழந்தேன் அப்பாவின் சாவால் -- பிறகு
கவிதையைநான் புறக்கணித்தேன் வேண்டு மென்றே ...
கவிதைதந்த உணர்ச்சியென் வாழ்வுக்(கு) ஒப்பவில்லை -- இப்போ
இருப்பதெல்லாம் ஏதோவோர் சுவையற்ற இலக்கணமே ...
யாருக்கு வேண்டுமது என்றும் நினப்பதுண்டு ...


சரி, போதும் இந்தப் புலம்பல் என்று நினைக்கிறேன்.

அணில் கொறித்துப்போட்ட ஆப்பில் படங்களையும் அவை எப்படி எனக்குப் பயன்பட்டன என்றும் இங்கே பார்க்கலாம்:

கொறிக்கப்பட்ட ஆப்பில் பழங்கள் பல. அவற்றுள் இரண்டு மட்டும் இங்கே:





விடுவேனோ இதன் சுவையை என்று நான் தயாரித்த காய்க்கலவை -- ஆப்பில், கீரை, செலெரித் தண்டுகள், காரெட், பீட்ரூட் ...




சின்ன வயதில் அம்மா சொல்லிக் கேள்வி ... ஸ்ரீராமன் வருவான் என்று காத்திருந்த சபரிக்கிழவி அவனுக்குக் கொடுப்பதற்காகப் பழங்களைத் தேடிப் பொறுக்கிப் பொறுக்கி எடுத்து, கடித்துச் சுவை பார்த்து ... நல்ல சுவையான பழங்களைமட்டும் அவனுக்காகச் சேர்த்துவைத்திருந்தாள் என்று.

என் வீட்டுக் கூரை அணிலும் இப்படித்தான் ... இங்கே அந்த ஸ்ரீராமன் இல்லாவிட்டாலும் ...  பழங்களைக் கடித்துப் போட்டுவிடும்.

3 comments:

  1. சுகமுனி கடித்துச் சுவைத்த கவியன்றோ பாகவதம்? சோழியன் சுவைத்துப் போட்ட கரும்பன்றோ இராமாயணம்!

    ReplyDelete
  2. எங்க வீட்டு மாமரத்தின் மாம்பழங்களும் இப்படித் தான் அணில் சாறைக்கூட உறிஞ்சிட்டுப் போட்டுடும். :))) அதோடு கிளிகளும், ஆனால் ஒண்ணு கூட மாட்டிக்காது. ஓட்டம் பிடிச்சுடும். இப்போ பக்கத்திலே கட்டும் அடுக்கு மாடிக்குடியிருப்பின் கான்க்ரீட் கலவைகள் விழுந்து மரமே செத்துப்போயிடும் போல இருக்கு! :(

    ReplyDelete
  3. அன்பின் அம்மா,

    வாழ்வெனும் தோட்டத்தில் மாளாதத் தேட்டங்கள்
    தேட்டங்களே வாழ்வாகிப்போன பாரங்கள்!

    ReplyDelete