1. மதுரைக் கீழ அனுமந்தராயன் கோயில் தெரு ... . முன்னாளில், என் சின்ன வயதில் (1950-களில்), வீணை சண்முகவடிவு அம்மையார் ( == எம். எஸ். அவர்களின் தாயார்) வீட்டிற்குத் தினமும் போன வழியில் இந்தப் பலகையைப் பார்த்த நினைவேயில்லை! இந்த "ஸ்டெயில் கிங் தொழிலாளர்கள்" எப்போ வந்தார்கள்?
2. அவசரமாக ஓடிய ஆட்டோவிலிருந்து அண்மையில் எடுத்தது. கீழே இறங்கி நின்று படம் எடுக்கமுடியாத நிலை. இடது பக்கம் உள்ள வீடுகளில் ஒன்றுதான் என் இனிய அருமை அன்புத் தெய்வம் வீணை சண்முகவடிவு அம்மாளின் வீடு. வீட்டு முகப்பு மாறியிருப்பதுபோல் இருக்கு. நான் அந்தக் காலத்தில் போன நாட்களில் இத்தனைக் கூட்டமில்லை, ஆட்டோ இல்லை, நெரிசல் இல்லை. அந்தச் சின்ன வயதிலும் ... கவலையில்லாமல், இடிபடாமல் தினமும் போய்வந்தேன். இந்தப் பிறவியில் எனக்குக் கிடைத்த மிகப் பெரிய பேறு அது. தெருவின் கோடியில் ... நேரே பாருங்கள், மேலக்கோபுர வாசல் தெருவில் "டெல்லிவாலா ஸ்வீட்ஸ்" கடையின் பெயர்ப் பலகை தெரியும். வலது பக்கம் திரும்பிப் போனால் மேலக் கோபுரம் வரும் அப்பொ, இடது பக்கம் திரும்பினால் மேலச் சித்திரை வீதியில் "ஆதி காலத்து ஒரிஜினல் நாகப்பட்டிணம் நெய் மிட்டாய்க் கடை" வரும். காலையில் சீக்கிரம் போனால் ... மசாலா உருளைக்கிழங்கு கிடைக்கும்! :-)
3. பழங்கால எழுகடல் தெருவை அடைத்து இப்படி ஒரு புது நந்தி! நந்தனுக்கு அடைத்த தில்லை என்ற நினைப்போ? பார்க்கச் சகிக்கவில்லை. ச்சே ச்சே.
4. தெற்குமாசி வீதியில் ... திரௌபதி அம்மன் கோயிலுக்கு மேற்பட்டு உயரமான கட்டிடம் எழுப்பியிருக்கிறார்களே! கோயிலுக்கு மேல் உயரமான கட்டிடம் கட்டலாமோ? அதுவும் தொட்டடுத்து?
5. எனக்குத் தெரிந்த பழைய காலத்தில் "மேங்காட்டுப் பொட்டல்" என்று சொல்லப்பட்ட ஒரு பொட்டல் (திறந்த வெளி) ... இன்று இப்படி ...
6. சென்னையில் 'மெக்டானல்ட்' ...
படங்கள் ஏற்கெனவே பார்த்த நினைவு அம்மா. மேலக்கோபுர வாசலில் இருந்து டவுன்ஹால் ரோடு முடிவு வரை நெரிசல் தான். ரங்கநாதன் தெருவுக்குப் போட்டி.
ReplyDeleteபடங்கள் 1 & 2 வைஅன்றொரு நாள்: ஸெப்டம்பர் 16 இழையில் சேர்க்க உங்கள் அனுமதி கோருகிறேன், முனைவர், ராஜம்.
ReplyDelete