இங்கே கலியில் காணாத பொருட்களை மதுரை/புதுவையில் காணவும் சுவைக்கவும் முடிந்தது. அந்த வாய்ப்புக்கு நன்றி.
1. மதுரை யானைக்கல்லிலிருந்து கொடுக்காப்புளி / கொறுக்காப்புளி ... . நன்றி: அன்புமீனாவுக்கு
2. ராஜபாளையம் சப்பட்டை + கல்லாமை மாம்பழம் ... . நன்றி: என் தோழி ஹீமாவதிக்குப் பழம் கொண்டு தரும் பஞ்சவர்ணத்துக்கு.
3. மங்குஸ்தான் பழம் ... . நன்றி: மதுரையில் ஒரு கடை. அங்கே என்னைக் கூட்டிப்போனவர்களுக்கு.
4. நவ்வாப்பழம் ("நாவல் பழம்")
5. நொங்கு. ஆஷா மணிவண்ணன் சென்னையிலிருந்து புதுவைக்கு வரும் வழியில் வாங்கிக் கொண்டுவந்தது:
சில கணவர்களுக்கு நொங்கை உரித்துக் கொடுக்கணுமாமே!! அப்படி உரித்த நொங்கு இதோ. நன்றி: ஆஷா மணிவண்ணன்
6. ஆப்பம். நன்றி: என் தோழி ஹீமாவதி.
7. திங்க முடியாதது, ஆனால் பார்த்துத் தெரிஞ்சுக்கவேண்டியது ... பன்னாடை. இயற்கை தரும் நல்ல வடிகட்டி!
8. மல்லிகைப் பூ, புதுவையில். நன்றி: ஏவா வில்டென் + ஜான்-லூக் இருவருக்கும்; அவர்கள் வீட்டில். ஒரு சேதி தெரியுமா? மதுரையில் கிடைத்த மல்லிகையைவிடப் புதுச்சேரியில் கிடைத்த மல்லிகை அளவிலும் மணத்திலும் சிறந்து இருந்தது. என்ன காரணமோ தெரியவில்லை. வெப்பமோ?

கொடுக்காப்புளியும், நவாப்பழமும், நுங்கும் பள்ளி நாட்களை நினைவூட்டியது. அதோட அங்கே சுக்கு மிட்டாய் விற்ற தாத்தாவும் நினைவில் வந்தார். இந்த மல்லிப் பூ புதுச்சேரியில் உள்ளது குண்டு மல்லி மாதிரித் தெரியலை, மதுரைப் பக்கம் குண்டு மல்லி காம்பு குட்டையாய் இருக்குமே! இது காம்பு நீளமாத் தெரியுது.
ReplyDeleteஒரு வியாசமே எழுதிப்டலாம். கண்ணன் காணத்தவறியது; பச்சைமால் பித்தக்ளோப்யம் டல்ஸி (ஹி.ஹி.பொட்டானிக்கல் நேம்: கொடுக்காப்புளி) துவர்க்கும். செங்கண்மால் பித்தக்ளோப்யம் டல்ஸி இனிக்கும். சமயத்தில் இரண்டு துரட்டிக்கட்டினால் தான் எட்டும். அது ஒரு லாகவம்.
ReplyDeleteசப்பட்டை பனாரஸி லாங்க்டா மாதிரி. உறுஞ்சினாலே இனிக்கும். புளிச்சாலும் இனிக்கும்! மங்குஸ்தான் அங்கு-ஸ்தான் போல. சென்னையில் காணோம். நவ்வாப்பழம் நாமலே பறிச்சா, காயா இருந்தாலும் இனிக்கும். ஊதிச்சாப்பிட்டாலும் ஊதா! நொங்கு எடுப்பது ஒரு கலை. பன்னாடைக்கு ஒரு உபயோகம் இன்று தெரிந்தது. க்ளாஸ்மேட்டுகளை வசை பாட உகந்தது. மல்லிப்பூ இங்கே எங்க தோட்டத்திலே இருக்கே.
கோடையில் நன்னாரி நொங்கு பைனாப்பிள் போட்ட சர்பத், கொல்லாம்பழம், ஐனிச்சக்கை, உப்புபோட்ட காளிமார்க் கோலிசோடா, இவையெல்லாம் பார்த்து வருடக்கணக்கில் ஆகிவிட்டது
ReplyDeleteநீலகண்டன் (செம்பூர் நீலு)
மும்பை