Monday, August 8, 2011

சட்னி -- தேங்காய் + ஆப்பிலுடன் ...

இது திருமதி சுபாஷிணி ட்ரெம்மல் அவர்களுக்கான சிறப்புப் பதிவு.

கீதா சொன்னதும் எல்.கே சொன்னதும் கட்டாயம் செய்து பாருங்க ... .  நல்ல வழக்கமா, மரபு வகையில் செய்யும் முறைகள் சொல்லியிருக்காங்க.


வெளிநாட்டுலெ ஒரு பெரிய மின்தொழிலகத்தில் ஒரு பெரிய பதவியில் இருக்கும் உங்களுக்கு நேரம் கிடைத்தால் / கிடைக்காவிட்டால் ... இதோ ... இந்த என் போலச் சோம்பேறிகள் செய்யும் வகையிலும் செஞ்சு பாருங்க ...

1. தேங்காய்த் துருவலை எடுத்துக்கொள்ளவும்.  
 


(நான் பயன்படுத்தியது பால் பிழிந்து மீந்துபோன துருவல்! கஞ்சமா? வீணாக்காத முயற்சியா? "நளபாக" வல்லுநர் குழு தீர்மானிக்கட்டும்.)

2. கொஞ்சம் பச்சை ஆப்பில் துண்டுகளும் மிளகாயும் எடுத்துக்கங்க. (புளித்திருக்கும் ஆப்பில் வகை நல்லாயிருக்கும்.)   

(இங்கே வீட்டுப் பின்புறம் விளைந்த ஆப்பிலும் மிளகாயும்.)

3. சில வற்றல் மிளகாயும் (தேவைக்கு ஏத்தபடி) எடுத்துக்கங்க. (எத்தனை என்று சொல்லமாட்டேன். சொன்னா ... ஒங்க வீட்டுக்காரர் ஒங்களுக்கு மட்டுமே புரிஞ்ச மொழிய்லெ ... 'இந்த ரெசிப்பி கொடுத்த அம்மாவெ ஒடனே வெரட்டு' - னு சொல்லிடுவாரு!)

4. கொஞ்சம் கொத்தமல்லித் தழை எடுத்துக்கங்க.

5. துளியூண்டு உப்பு எடுத்துக்கங்க.

5. எல்லாத்தெயும் விரும்பிய அளவு கொர கொரப்பாகவோ, விழுதாகவோ அரைச்சு எடுங்க. (தண்ணி ஊத்த வேண்டாம். ஆப்பிலின் சாறு போதுமான ஈரம் கொடுக்கும்.)



6. தாளிக்க வேணும்னா செய்யுங்க.


இதெ .. சோத்தோடெ கலந்து சாப்பிடலாம். இல்லாட்டி, ஒங்க ஊர் cheese கலந்து sandwich-லெ வச்சுச் சாப்பிட்டா ... நல்லாவே இருக்கும்; நல்ல சுவையும் வயிற்றுக்குப் பலனும் கிடைக்கும். நான் சோயாவில் செய்த தயிர்க்கட்டியோடெ சாப்பிடுவேன். நல்லா இருக்கும்.


No comments:

Post a Comment