Monday, August 29, 2011

எங்கு சென்றாயோ? ...




 
இங்கு ... எம்மை மறந்தாயோ? ...

1. இதழே கண்ணீராக ...




2. பூச்சிக்கடி பட்டு ...





3. காலடி ஓசைக்கு ஏங்கி ... தரையில் விழுந்து ...



4. கிளைக்க வழியில்லாமல் ...




5. பிஞ்சிலே பழுத்து ...




6. வெம்பி ... கீழே விழுந்து ...




7. நீ வந்து பணம் கட்டக் காத்திருக்கோம் ...

 


என் வரவு நல்வரவே! :-)

3 comments:

  1. “இதழே கண்ணீராக ...பூச்சிக்கடி பட்டு ... காலடி ஓசைக்கு ஏங்கி ... தரையில் விழுந்து ... கிளைக்க வழியில்லாமல் ...பிஞ்சிலே பழுத்து ...வெம்பி ... கீழே விழுந்து ... நீ வந்து பணம் கட்டக் காத்திருக்கோம் ...என் வரவு நல்வரவே! :-) “

    ~ இதை படித்து, பரவசமாகி, யாப்பருங்கலகரிகையை யாம் வினவினோம். இது தொடரா மொழி செய்யுள், புது வரவு, அமெரிக்கக்கண்டத்தின் தென் கிழக்குப்பகுதியில், தமிழார்வம் கொண்ட தலைமகள் ஒருத்தியின் நவீன ஆன்மிகம் என்றாள். மனனம் செய்யும்; தெளிவு பிறக்குமென்றாள். சற்றே, உலவி விட்டு வந்தேன். மனம் சொல்ல, கை எழுதுகிறது.

    “ரிக் வேதம் முதற்கொண்டு வனஸ்பதியை போற்றி பாடி வருகிறது, ஆன்மிக இலக்கியம். மனித நேயத்தை பிறகு பார்த்துக்கொள்ளலாம். மனித நேசத்தை வளர்க்க எங்களை பார்த்து கற்றுக்கொள்ளவும் என்றது இலை. அதற்கு பனியின் கனத்தைத் தாங்கும் இதயம் உளதல்லவா! பூச்சிக்கடித்தாலும், நான் அதை கடிக்கவில்லை. பார்த்தாயோ? என்று கேட்டது சரகு. வேலிக்காத்தான் (லாண்டனா) ஒன்று மண்டிக்கிடந்தது, ‘இது தாண்டா வாழ்க்கை! ‘பொருத்தம்’ ஐயாவை உகந்த யூட்யூப் போடச்சொல்லு’ என்றது. கிளைக்க வழி..! என்று தத்துவம் பேசியும், பிஞ்சிலே பழுத்து, வெம்பியும் வருந்தியது, ஒரு மாங்கனி. அதெல்லாம் சகஜமப்பா என்று ஆறுதல் கூறி ரீங்காரம் செய்த வண்டினம், கப்பமும் கட்டி, பரிசலும் அளித்து, சுஸ்வாகதம் என்று கீதம் பாடியது.”


    எம் வரவையே ரசித்த யாம் ராஜத்திடம் வேண்டுவது: நற்றிணையோ?, குறுந்தொகையோ? ஒரு சங்கக்கால செய்யுள் ஒன்றை தரவும் என்று.
    இப்படிக்கு,
    ‘Fill up the blanks.’
    இன்னம்பூரான்
    30 08 2011

    ReplyDelete
  2. அம்மா, உங்கள் படங்கள் மனதில் ஏற்படுத்திய உணர்வை எப்படி விவரிப்பது?>? சோகமா? வெறுமையா, பரிதவிப்பா தெரியவில்லை! இப்போ ஒரு வாரம் கழிச்சு எங்க சொந்த வீட்டினுள் சென்று செடிகளையும், மரங்களையும் பார்க்கையில் எல்லாம் சோகத்தைப் பூசிக்கொண்டிருப்பதாய் எங்க இரண்டு பேருக்குமே தோன்றியது. :(((( நீங்கள் கவிதையாகவே வடித்து விட்டீர்கள் அம்மா.

    ReplyDelete