Monday, January 10, 2011

இட்டிலி -- இரண்டு வகையில்...

இட்டிலிக்கு மாவு புளிக்காத இடத்தில் ஒப்புக்குச் சப்பாணியாக ... ஏதோ ... செய்தது...

பார்லி (barley), கீனுவா (quinoa), சோளக் குருணை (corn meal) -- இவை கலந்தது
---------------------------------------------------------------- -----------------------------------------------

இந்த வகை இட்டிலிகளை வெந்த பார்லி, வெந்த கொண்டைக்கடலை (chickpeas; garbanzo beans), சோளக்குருணை ... இவைகளை வைத்தும் செய்யலாம்.



1. வெந்த பார்லி (cooked barley) ஒரு பங்கு, வெந்த கீனுவா (cooked quinoa) ஒரு பங்கு ... இரண்டையும் நன்றாக அரைத்துக்கொள்ளவும்.

2. அரைத்த கலவையில் ஒரு பங்கு சோளக் குருணையைச் சேர்த்து, 8~10 மணி அளவு புளிக்க வைக்கவும்.

3. புளித்த மாவை இட்டிலிகளாக வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்.




+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

காஞ்சிபுரம் குடலை இட்டிலி போல ...
-----------------------------------------------------

1. 3/4 பங்கு பச்சரிசி, 3/4 பங்கு உமி நீக்காத மரநிற அரிசி (brown rice), ஒரு பங்கு நல்ல உளுந்து (உடைத்ததுதான் பயன்படுத்தினேன்; முழு உளுந்து இல்லை) -- இவைகளக் களைந்து நல்ல தண்ணீரில் ஊறவைக்கவும்.

2. ஊறிய அரிசிகளைக் கெட்டியாக, தண்ணீர் விடாமல், ரவைப் பதத்திற்கு அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

3. ஊறிய உளுந்தைக் கெட்டியாக, தண்ணீர் விடாமல், குழையாமல், பரபர என்ற பதத்திற்கு அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

4. அரைத்த இரண்டு வகை மாவுகளையும் கலந்து, 2~3 தேக்கரண்டி புளித்த மோரும் சிறிது உப்பும் சேர்க்கவும்.




5. மாவை 8~10 மணி நேரம் புளிக்க வைக்கவும். (இங்கே இரண்டு நாள் புளிக்க வைத்தேன். சோய் மோர் மாவை நன்றாகவே புளிக்கவைத்தது!)

6. ஒரு நல்ல பாத்திரத்தில் சிறிது நல்லெண்ணெயில் கடுகு, கடலைப்பருப்பு, பச்சைக் கறிவேப்பிலை, முந்திரிப்பருப்பு இவைகளைத் தாளித்து, மேற்சொன்ன புளித்த மாவில் கலக்கவும்.

7. சிறிது மிளகும் சீரகமும் பொடித்து எடுத்து மேற்சொன்ன மாவில் சேர்க்கவும்.



8. பூக்குடலை இருந்தால் (!!!) அதில் இந்த மாவை ஊற்றி இட்டிலிகளாகச் செய்து எடுத்துக்கொள்ளவும்!!

9. பூக்குடலை இல்லாததால் ... எப்பவும் போலவே இட்டிலியாக ஊற்றி எடுத்தது:



சின்னக் கோப்பை மாதிரியான கிண்ணத்தில் மாவை ஊற்றியும் இட்டிலியாகச் செய்யலாம் என்று கேள்வி.

2 comments:

  1. தஞ்சாவூரில் எங்கள் வீட்டில் ஏதாவது ஒரு நாள் அல்லோலோகப்பட்டுக்கிடந்தது என்றால், என் சித்தியா மடப்பள்ளியில் புகுந்து விட்டார், காஞ்சீபுரம் இட்லியை பூக்குடலையில் செய்கிறார் என்று பொருள். வாசலிலில் நிற்கும் ஜட்கா வண்டி அப்துலை தவிர, சிண்டும், வாண்டுமாக, நாங்கள் எல்லாரும் எடுபிடிகள். தாங்கமுடியாமல், சித்தி தையல் வேலையில். ஆனா, அது தான் ஒரிஜினல் காஞ்சிபுரம் இட்லி, வித் மிளகு கண்கள்!

    ReplyDelete
  2. காஞ்சீபுரம் இட்லி பச்சரிசி, புழுங்கல் அரிசி, உளுந்து சமமாய்ப் போட்டுச் செய்வேன். மற்றபடி செய்முறைகள் நீங்க சொல்லி இருக்கிறாப்போல் தான்.

    ReplyDelete