Tuesday, January 11, 2011

அடுப்பு வகைகளும் ... பாத்திமாவில் பொங்கல் கொண்டாட்டமும்

இணையத்தில் கிடைத்த படங்கள்... சில:
-------------------------------------------------------

1. குமுட்டி அடுப்பு. கரி அடுப்பு.




2. விறகு அடுப்பு



3. கோட்டை அடுப்பு. விறகு அடுப்பு.



4. கற்களில் அடுப்பு. விறகும் சுள்ளியும் பயன்படுத்தி.




++++++++++++++++++++++++++++++++++++++++

பாத்திமாக் கல்லூரியில் பொங்கல் கொண்டாட்டம்.
--------------------------------------------------------------------

கிறித்துவக் கல்லூரிதான்! ஆனாலும் ... ஒவ்வோர் ஆண்டும் பொங்கல் சமைப்பது ஒரு பெரிய திருவிழாவாக நடக்கும். ஒவ்வொரு துறை மாணவியரும் அந்த நாளுக்கு என்று ஒரே மாதிரிப் புடைவையை உடுத்துவார்கள். இதற்காகத் தனியே புடைவை தயாரிக்கச் சொல்லிக் கடைகளுக்கு order கொடுத்ததும் உண்டு!

சுமார் 15 பானைகளில் பொங்கல் தயாராகும். கல்லூரியில் எல்லாரும் சாப்பிடுவோம். அதோடு, பக்கத்துக் கிராமத்துச் சிறுவர்களுக்கும் பெரியவர்களுக்கும் பொங்கல் எடுத்துச் செல்லப்படும்.




உட்கார்ந்திருப்பவர்கள்: ஜானகியும் மீனாட்சி பாரதியும் (= மீனாட்சி முருகரத்தினம்). நிற்பவர்கள், பின் வரிசையில் இடமிருந்து வலமாக: விஜயபாரதி (பாரதியாரின் பேத்தி), Ms. V. Rajam (மலையாளி; எனக்கு ஆசிரியையாக இருந்தவர்). மற்றவர்கள் தமிழ்த்துறை மாணவியர். கீழே உட்கார்ந்திருக்கும் மீனா "மாசமாய்" இருந்தாள் போல; நினைவில்லை; "பாட்டி மாதிரி உட்கார்ந்திருக்கே, எழுந்திரு" என்று சொல்லிக் கிண்டல் செய்வது நான். கொண்டையோடு இருக்கும் நாங்கள் எல்லாரும் ஆசிரியைகள். பிற பெண்கள் மாணவியர். பழைய காலம்!!

4 comments:

  1. பாத்திமாக் கல்லூரியின் பொங்கல் கொண்டாட்டம் என்னை மிகவும் கவர்ந்தது. இந்த கோட்டை அடுப்பில் மெகா சைஸ்ஸும் உண்டு. அணி வகுத்த அடுப்புகள். அரியக்குடியில் தாத்தா பத்து நாள் உத்ஸவம் நடத்தும் போது இவை ஜக,ஜக, தக, தக என்று தகிக்கும். பரிசாரகர்களை துன்புறுத்தி, அப்பளம் அங்கே சுட்டு சாப்பிடுவதில் ஒரு மகிழ்ச்சி. தேங்காய் துருவும் போது, கபோதி மாதிரி எடுத்து சாப்பிடுவதில் ஒரு அலாதி இன்பம். எங்களுக்கு இதற்கெல்லாம் கூட்டாளி இன்னம்பூர் 'சிங்கம்' செளந்தரராஜ ஐயங்கார் என்ற டோண்ட் கேர் மாஸ்டர்: அப்பாவின் அப்பா.

    ReplyDelete
  2. நல்லா இருக்கு அம்மா. விறகு அடுப்பில் நான் சமைச்சிருக்கேன். என் மாமியார் வீட்டில் (கிராமம்) விறகு அடுப்புத் தான். கிட்டத்தட்ட 1983 வரையிலும், அவர்கள் அங்கே இருந்தப்போ அங்கே போகும்போதெல்லாம் அதிலே தான் சமைத்திருக்கேன். களிமண்ணால் அடுப்பை என் மாமியார் போடுவார்கள். சாணியும், கரித்தூளும் கலந்து, கொஞ்சம் செம்மண்ணும் சேர்த்து நான் மெழுகுவேன். அப்புறம் கோலம் போட்டு நல்ல வேளை பார்த்து முதலில் பால் காய்ச்சுவோம். இப்படி நிறைய அடுப்புப் போட்டிருக்கு. ஏனென்றால் களிமண் அடுப்பை நீர் விட்டு அலம்ப முடியாது. சாணி போட்டுத்தான் மெழுகவேண்டும். சில சமயம் சில பாத்திரங்களின் கனம் தாங்காமல் அடுப்பு உடையும். அப்போ அதே இடத்தில் புது அடுப்புப் போடுவோம். குமுட்டி கூடக் களிமண் குமுட்டி உண்டு. அப்பா வீட்டில் இருந்தவரை கல்யாணம் ஆகும் முன்னர் குமுட்டி அடுப்புத்தான். நாங்க இருந்த மேலாவணி மூலவீதி வீட்டில் குளியலறை அருகே மேலே நீங்க போட்டிருக்கிற கோட்டை அடுப்பு இருக்கும். நாலைந்து இருக்கும். அதிலே வெந்நீர் போட்டுப்போம். சமாராதனைக்கு அம்மா, பெரியம்மா அதிலே சமைப்பாங்க. இரண்டு படி வெண்கலப்பானை! :))))))))))

    ReplyDelete
  3. ஒரு படி வெண்கலப்பானை இப்போவும் விசேஷ நாட்களில் முப்பது பேர் சாப்பிடும்போது அதிலே சாதம் வைப்பேன். :))))))

    ReplyDelete
  4. அக்கா,
    பாரதியின் பேத்தி அவர்களையும், தங்களையும், தங்களது சகதோழிகளையும் கண்டு மகிழ்வடைகிறேன்.

    .......உட்கார்ந்திருக்கும் மீனா "மாசமாய்" இருந்தாள் போல; நினைவில்லை; "பாட்டி மாதிரி உட்கார்ந்திருக்கே, எழுந்திரு" என்று சொல்லிக் கிண்டல் செய்வது நான். கொண்டையோடு இருக்கும் நாங்கள் எல்லாரும் ஆசிரியைகள். பிற பெண்கள் மாணவியர். பழைய காலம்!!....

    எனது அம்மாயி பழனியாயி அவர்கள் இப்படித்தான் ஒருகாலைக் கையால் மடக்கி உட்கார்ந்து கொண்டு சமையல் செய்வார்.

    அருமையான படம்.
    அன்பன்
    கி.காளைராசன்

    ReplyDelete