Sunday, December 5, 2010

வித்தியாசமான கிழங்கு -- மரவள்ளி?

Yuca ( யக்கா / யுக்கா ) root  என்று கிடைக்கிறது அமெரிக்காவில்.

இதன் பெயர் கசாவா (cassava) என்றும் தெரிகிறது: http://en.wikipedia.org/wiki/Cassava

இது மூட்டுவலிக்குக் குணம் தரும் என்றும் கேள்வி.

இதைப் பல வகையில் பயன்படுத்தலாம். ஒரு வகை இங்கே.


1. நல்ல ஒரு கிழங்கைக் கழுவி எடுத்துக்கொள்ளவும்.




2. தோல் சீவிக் கழுவி எடுத்துக்கொள்ளவும்.




3. விரும்பிய அளவிற்குத் துண்டங்களாக நறுக்கி வேகவைத்து எடுக்கவும்.




4. விரும்பிய மசாலாத் தூள் சேர்த்துக் கறி செய்யவும்.




குறிப்பு: இந்தக் கிழங்கில் வறுவல், பஜ்ஜி போன்ற பண்டங்களும் செய்யலாம். ஆனால் அந்தச் சமையலில் எண்ணெய் கூடுதலாகத் தேவைப்படும். வேக வைத்தது அல்லது பச்சையாகச் சீவினது ... மெது-மெது-தோசை (pancake) செய்யவும் பயன்படுத்தலாம்.

நல்லது என்ன என்றால் -- கிழங்கின் சுவையும் இருக்கும்; உருளைக்கிழங்கு ஒத்துவராதவருக்கும் ஒத்துவரும் என்று தோன்றுகிறது. ஒரு முறையாவது பயன்படுத்திப் பாருங்கள்.

6 comments:

  1. என் மாட்டுப்பெண், கிட்டத்தட்ட, இப்படி தான் கசாவா செய்வாள். ருசித்து சப்பிடுவோம்.

    ReplyDelete
  2. அங்கே போறச்சே முயற்சி செய்யறேன். இந்தக் கிழங்கை மெம்பிஸிலோ, ஹூஸ்டனிலோ பார்த்த நினைவு இல்லை! :(

    ReplyDelete
  3. லண்டன் போனா ... எனக்குக் கொண்டாட்டம் தான்! 'இ' சார் மருமகள் வீட்டிற்குப் போய்க் கேட்டு வாங்கிச் சாப்பிடுவேன்! ;-)

    கீதா, அங்கெ ஒரு வேளை ... தனிக் கடைகள்ளெ (Mexican) வச்சிருக்காங்களொ என்னமோ. கட்டாயம் கிடைக்கும். பாருங்க.

    ReplyDelete
  4. நம்ம ஊர் மரவள்ளிக் கிழங்கு போல்தான் உள்ளது. செய்யும் முறையும் இது போல் தான். ஆனால் இதன் சுவை பற்றிதான் தெரியவில்லை அம்மா. நான் சாப்பிட்டதில்லை.

    ReplyDelete
  5. நல்ல சுவை இருக்கும், பவளஸ்ரீ. செய்து பாருங்கள்.

    ReplyDelete