இட்டிலி வேணும். ஆமாம் ... கட்டாயம் இட்டிலி வேணும். ஆனா ... மாவறைக்க முடியலெ; கடெய்ல மாவு வாங்கலாம்-னா அதுலெ ... என்னத்தெயோ eno-வாமே அதெப் போட்டு ... தானாப் பொங்க வேண்டிய மாவெத் தடியாலெ அடிச்சுப் பொங்க வச்ச மாதிரி ... .
சரி. வேற மாதிரி இட்டிலி செய்து பார்க்கலாம்.
1. "நூடுல்"-னு சொல்றதுலெ ஒரு நல்ல வகை. இங்கே எடுத்துக்கொண்டது ஊடான் நூடுல் (udon noodles) என்ற வகை.
2. தேவையான அளவு எடுத்துக்கொள்ளவும். (15~20 குச்சிகள் எடுத்துக்கொள்ளலாம்.)
3. சிறு ஒரு அங்குல நீளத் துண்டுகளாக ஒடித்து, எண்ணெயிலாத சட்டியில் போட்டுப் பொன் நிறமாக வரும் வரை வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
4. மக்காச்சோளக் குருணை ஒரு சிறிய கோப்பை அளவு எடுத்துக்கொள்ளவும்.
5. சோளக்குருணையை எண்ணெய் இல்லாமல் வறுத்துக்கொள்ளவும்.
6. பொடித்த நூடுல் + சோளக்குருணை இரண்டையும் கலந்து, 2~3 பச்சை மிளகாய் (அவரவர் சுவைக்கும் தேவைக்கும் ஏற்றபடி), சிறு இஞ்சித் துண்டுகள், பச்சைக் கறிவேப்பிலைத் தழை சேர்த்து, 1~2 சிறிய கோப்பை அளவு (சோய்) தயிரில் 20~25 மணித்துளிகள் ஊறவைக்கவும்.
7. இட்லியை வேகவைப்பது போல் வேகவைத்து எடுக்கவும்.
(இங்கே மர நிறத் தாளில் செய்த சிறு கிண்ணங்களில் நூடுல் கலவையை ஊற்றியது.)
8. வெந்த இட்டிலி.
9. மிளகாய்ப் பொடி தடவியது...
சுவையானது!
ஆகா, அருமையம்மா. இங்கும் சோள ரவை கிடைக்கிறது. நான் உப்புமா மட்டுமே செய்வேன். இந்த ரெசிபி முயற்சிக்கிறேன்... நன்றி அம்மா.
ReplyDeleteசேமியா இட்லினுகேள்விப் பட்டிருக்கேன், உங்க நூட்டிலியும் அப்படித் தான் இருக்கும் போல! உங்க ரசனை பிரமிக்க வைக்கிறது. சமையலை ஒரு கலையாகவே பயின்றிருக்கிறீர்கள்.
ReplyDeleteஅருமைமா. வித்யாசமா இருக்கு. முயன்று பார்கிறேன்
ReplyDelete