இது என்ன? உப்புமாவா? வேறு எதுவுமா? இதுக்குத் தனிப் பெயர் இல்லை. சுவையும் சத்தும் உண்டு.
1. வெள்ளைக் கீனுவா (quinoa) தேவையான அளவு. (ஒரு மடங்கு கீனுவா வெந்ததும் மூன்று மடங்காகும்.)
2. மூன்று நான்கு முறை நல்ல தண்ணீரில் கழுவி வடிய வைக்கவும்.
3. ஒன்றுக்கு 2~3 பங்கு தண்ணீரில் வேகவைத்து எடுத்துக்கொள்ளவும். (அடுப்பின் சூட்டைப் பொருத்து ... 15~20 மணித்துளிகளில் வெந்துவிடும்.)
4. வெந்த கீனுவாவைப் பல வகைகளில் பயன்படுத்தலாம். பாயசம் செய்யலாம். பால், தயிர் கலந்து சாப்பிடலாம். தயிர் சாதம், அல்லது வேறு வகையில் கலந்த சாதம் செய்வதுபோல் செய்யலாம்.
5. இன்று செய்த காய்க்கலவையில் கீனுவா.
குறிப்பு: கீனுவாவை மலர மலரவும் வேகவைக்கலாம். சற்றுக் குழையவும் வேகவைக்கலாம். கட்டி தட்டாது. Crunchy என்று சொல்லும்படி வரும்.
கலவை அருமை. அதிகாலையில் பசியை தூண்டுகிறீர்கள்
ReplyDeleteலண்டன் சென்ற பிறகு கீனுவாவை மலர மலர வேகவைத்து, இன்னம்பூரான் ஸ்பெஷல் செய்து காட்டுகிறேன்.
ReplyDeletemmmmmmமுற்றிலும் புதியது. அறிமுகத்துக்கு நன்றி அம்மா.
ReplyDeleteகாலை உணவுக்கும், எந்த நேர உணவுக்கும் இது நல்லதே, LK! சென்னையில் கிடைத்தால் நல்லது.
ReplyDeleteஅப்பொ ... லண்டனுக்கு ஒரு தடவை சாப்பிட வரப் போறேன்!
கீதா, அமெரிக்காவில் நீங்க இதைச் சமெச்சுப் பாக்கலாம். ஒங்க பொண்ணுக்கு ஒருவேளை தெரிஞ்சு இருக்கலாம்.
is this varagarisi?
ReplyDeleteSelvi