வெளிநாடுகளில் quinoa (கீனுவா) என்று கிடைக்கும் தானியம் மிகவும் சத்துள்ளது. மேல் விவரம் இங்கே கிடைக்கும்: http://en.wikipedia.org/wiki/Quinoa
இதைப் பல வகைகளில் சமைத்துச் சுவைக்கலாம்.
இந்த முறை "சேவை / தேன்குழல்" (noodles) வடிவில் கிடைத்த கீனுவாவைக் கஞ்சி செய்த முறை இங்கே.
1. நல்ல தரமான கீனுவா தேன்குழலை வாங்கிக்கொள்ளவும்.
2. தேவையான அளவு கீனுவாவைக் கழுவி, ஒன்றுக்கு மூன்று ~ நான்கு அளவு தண்ணீரில் வேகவைத்து, வடி கட்டி எடுத்துக்கொள்ளவும்.
[வடிந்த கீனுவா நீரை வீணாக்க வேண்டாம்! வேறுமுறையில் அதைச் சுவைப்பதைப் பார்ப்போம்.]
3. கீரைத்தண்டு போலக் காய் ஏதாவது எடுத்துக்கொள்ளவும். இங்கே இருப்பது ஆஸ்பாரகஸ் (asparagus) என்ற காய்.
4. நன்றாகக் கழுவி, தண்டுப் பகுதியைச் சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.
5. நறுக்கிய காய்த் துண்டுகளைத் தேவைக்கு ஏற்றபடி ... சிறிதே வேகவைத்தோ அல்லது சுருள வதக்கியோ தாளித்து எடுத்துக்கொள்ளவும்.
6. மிஞ்சியிருந்த பழைய குழம்பு ஏதாவது இருந்தால் ... எடுத்துக்கொள்ளவும்.
7. வெந்த கீனுவா, சமைத்த காய், குழம்பு இவற்றைத் தேவையான அளவில் கலந்து சுவைக்கவும்!
இந்தியாவில் இந்தக் கினுவா கிடைக்காதா
ReplyDeleteபாஸ்டா என்ற பெயரில் கிடைக்கும் எல்கே. ஆனால் இதே ப்ராண்டானு தெரியலை, ஸ்பென்சரில் பாருங்க! :D
ReplyDeleteஎன் பெண் குழந்தைகளுக்குச் சமைத்துக் கொடுப்பாள் பார்த்திருக்கேன். அந்தக் கீரை தான் முற்றிலும் புதிது. பார்த்ததில்லை. நன்றி அம்மா.
நான் கூட இந்த கினுவா தேடியதில்லை, இங்கிலாந்திலும், அமெரிக்காவிலும். நானே செய்து கொள்ளக்கூடியதாக இருக்கிறது வழிமுறை. என் ஆரோக்கிய நிலை ஆயிரம் வகைகளில் பாதிக்கப்பட்டு இருப்பதால், இந்த கினுவா உதவும். முதல் காரியமாக, மாட்டுப்பெண்ணிடம், இதை காண்பித்து ஒத்திகை பார்த்து, ஃபெப்ரவரி 27ம்தேதி எழுதுகிறேன்.
ReplyDeleteஅமெரிக்கா வரும்போது இங்கே சாப்பிட வாருங்கள்! :-)
ReplyDelete