Thursday, August 11, 2011

கம்பு -- செய்வோமா இதில் வெண்பொங்கல்? ...

கம்பு என்ற இந்தக் கூலத்தை / தானியத்தை (grain) பற்றிப் பல முறை கேள்விப்பட்டிருந்தேன். ஆனால் ... அண்மையில்தான் கண்ணால் பார்த்து, கையிலும் எடுத்துச் சமைக்கும் வாய்ப்புக் கிடைத்தது.

தமிழகம் தவிர்த்த வெளிநாடுகளில் இந்தக் கம்பு எங்கே கிடைக்கும் என்று தெரியவில்லை.


மிகவும் சத்தும் சுவையும்  நிறைந்தது இது என்று நினைக்கிறேன்.

இந்தக் கால அவசர உலகத்தில் ... இதை வேகவைக்கப் பொறுமை தேவை!

கம்புப் பொங்கல் செய்ய ...

1. ஒரு கிண்ணம் கம்பையும் அரைக் கிண்ணம் பாசிப்பருப்பையும் சேர்த்து நன்றாகக் களைந்து, விரும்பிய அளவு இஞ்சியும் மிளகும் சேர்த்து ... விரும்பிய அளவு குழைத்து வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்.



2. சிறிது மிளகும் சீரகமும் பொடித்து எடுத்துக் கொண்டு மேற்கண்ட குழப்பத்தில் கலந்துகொள்ளவும்.



3. தேவையானால் ... சிறிது நல்லெண்ணெய் கலக்கவும்.



4. கூடச் சேர்த்துச் சாப்பிட ... பூண்டு ரசம் ...

 
4a. ஃப்ரென்ச் பீன்ஸ் கறி ...
4c. காரெட், செலெரி (celery), பீட்ரூட்டுடன் ... ஒரு கலவை ...


வேறேன்ன வேண்டும்? மங்களமாய் வாழவேண்டும்! :-)















3 comments:

  1. ஈற்றிலிருக்கும் விருந்து கலவையில்லை. ரசவாதம். திரு. சரவணன் சொல்வது போல், கம்பங்கூழ் உசத்தி. வருஷநாட்டில், மானம் பாத்த பூமிக்கு, கவலையில் தண்ணி இறைத்து, களைப்புத்தீர, கம்பங்கூழ் அருகும்போது, அது இனிக்கும்.

    ReplyDelete
  2. அம்மா,

    எத்துனை அழகாக சமைத்து, அதைப் புகைப்படமும் எடுத்து, பார்த்த மாத்திரத்தில் வயிறு நிரம்பிவிடும் அளவிற்கு நிறைவு......அருமை அம்மா. தங்களிடம் கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது. நன்றி.

    ReplyDelete
  3. கல்லுரல்?? அமெரிக்காவில்?? ஆச்சரியம் தான் போங்க. கம்புப் பொங்கல் சாப்பிட்டதில்லை. கூழ், தோசை தெரியும், பண்ணிச் சாப்பிட்டிருக்கோம். இப்போது எப்போவானும் மாறுதலுக்குப் பண்ணுவதுண்டு. கம்பு அடை, கீரைக்குழம்போடு நன்றாகவே இருக்கும். :D

    ReplyDelete