Sunday, August 14, 2011

கலிப்படம் -- "கைராட்டையே ஆயுதம் ..." ...

என்ற ஒரு பழைய காலத்துப் பாடலை நினைவுபடுத்திய ஓர் இடம் ... கலிகால மதுரையில் ...











இங்கே நூல் திரித்து, நெய்யப்படும் துணிவகைகள் மிகவும் அருமையாகக் கிடைப்பதைப் பார்த்தேன்.

கைத்தறித் தொழில் வாழவேண்டும்!

4 comments:

  1. அன்பின் ராஜம் அம்மா,

    இனிய விடுதலைத் திருநாள் நல் வாழ்த்துகள்.. கைத்தறி தொழில் நலிந்து கொண்டே வருவது வருத்தம் அளிக்கக் கூடிய விசயம். இப்பொழுதெல்லாம் நல்ல அழகிய வேலைப்பாடுகள் கொண்ட துணி வகைகள் கைத்தறியிலும் கிடைக்கிறது..... நன்றி அம்மா.

    ReplyDelete
  2. அம்மா, காந்திகிராமமா?? இங்கே புடைவைகள் நன்றாக இருக்கும். விலை அதிகம் என்றாலும் தோய்த்துக் கட்ட அருமை. என்னிடம் உள்ளது. :)

    இந்தக் கைராட்டையில் நானும் நூல் நூற்றிருக்கிறேன். தக்ளியில் பஞ்சைப் போட்டு நூலைத் திரித்துக் கைராட்டையில் சிட்டங்கள் போட்டு.... அது ஒரு காலம், காங்கிரஸ் முதல்முறையாகப் பிளவுண்ட போது அப்பா கோபம் தாங்க முடியாமல் கைராட்டையை அம்மா, அழ, அழ விற்றார். பல நாட்கள் அம்மா கை ராட்டையை நினைத்து அழுது பார்த்திருக்கேன். :(

    ReplyDelete
  3. தக்ளி, ராட்டினம், சிட்டம், நெசவு... மெடிடேஷன், ஜபம், தபம் எல்லாம் தொடர்பு கொண்டவை. தக்ளி நடமாடும் ராட்டினம். அரட்டையை அடக்கிய ஆயுதம். ராட்டினம் சர்ச்சையை அண்டவிடாது. சிட்டம் படைப்பின் பயன். நெசவு கபீர்தாஸ்ஸை நினைவுறுத்தும் யக்ஞம்.

    ReplyDelete