Tuesday, August 23, 2011

பெருங்காயப் பெட்டி -- பழம்பெருமை ...

1. 1978-இறுதியில் தொடங்கி 1980-இல் எழுதி முடித்து 1981-இல் கிடைக்கச் செய்த முனைவர் பட்டத்துக்கான ஆய்வுக் கட்டுரை.  இது இரண்டு பகுதிகள் கொண்டது.  


முதல் பகுதி -- தொல்காப்பிய எழுத்ததிகாரத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தது.

இரண்டாம் பகுதி -- குறிப்பிட்ட சில வடமொழி இலக்கண ஆசிரியர்கள் தங்கள் மொழியை விளக்கும் முறையையும் தொல்காப்பியர் தமிழின் ஒலி/சொற்களை விளக்கும் முறையையும் ஒப்பிட்டது.
 



வேண்டுமென்றேதான் இதை இன்னும் புத்தக வடிவில் வெளியிடவில்லை.

+++++++++++++++++++++++++

2. முனைவர் பட்டம் பெற்றபின், வெளிநாட்டு மாணவர்களுக்காக என்று எழுதி 1992-இல் வெளியிட்ட புத்தகம். முனைந்து எழுதத் தொடங்கியது 1986-க்குப் பின். பிறகு பதிப்பகத்தாருக்கு அனுப்பி, அது இது என்று ... புத்தகம் வெளிவரக் காலம் கடந்துவிட்டது.


2a. படையல் என் பெற்றோருக்கும் ஆசிரியர்களுக்கும் ...


2b. வெளியீடு

விழிப்பு: இந்த இரண்டுமே (ஒன்று கட்டுரை, அடுத்தது புத்தகம்) -- முதல் பக்கம் தொடங்கிக் கடைசிப் பக்கம்வரை ... கீழே வைக்காமல் மூச்சுவிடாமல் ... படிக்கும் விறுவிறுப்போ கிறுகிறுப்போ நிறைந்த சிறுகதைகளோ, புதினங்களோ அல்ல! :-)

3 comments:

  1. மொழி, இலக்கியம், இலக்கணம், சொல், பொருள், உரை, ஆய்வு ஆகியவை பற்றி சிறிதளவு அறிவதாலும், வாழ்நாள் முழுதும் தேட்டலில் செலவழித்தவன் என்பதாலும், முனைவர் ராஜம் உணர்த்துவதை என்னால் புரிந்து கொள்ளமுடிகிறது. என்ன தான் 'தாட்பூட் தஞ்சாவூர்க்காரனாக' இருந்தாலும் மென்மை உணர்ந்து, அதை மதிக்க விழைபவன் யான். இது சம்பந்தமான எனது இரு இடுகைகள் சுருக்கமாக இருந்தாலும், குறிப்பால் உணர்த்த முயன்றன; தோல்வி அடைந்தன. Que Sera Sera.

    ReplyDelete
  2. என்ன சொல்ல என்று தெரியவில்லை, இ சார்! அறிவு, மென்மை உணர்வு ... எல்லாமே சிலருக்கு மட்டுமே புரியும். மிக மிக நன்றி!

    ReplyDelete
  3. அருமையான அர்ப்பணம். நன்றி அம்மா. தாமதமாகவேனும் கிடைத்ததே. உங்கள் உணர்வுகளும் புரிகின்றன.

    ReplyDelete